ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சம் லாலு மீது வழக்கு தொடர சிபிஐ.க்கு அனுமதி

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது, 2004 முதல் 2009-ம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, ரயில்வேயில் வேலை வழங்குவதற்காக லாலுவும் அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாக பெற்றதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் லூலு பிரசாத் யாதவ் மீது வழக்கு தொடர சிபிஐ.க்கு ஒன்றிய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. இநத வழக்கில் கடந்தாண்டு  சிறப்பு நீதிமன்றத்தில்  லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி  உள்பட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: