பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்குவது குறித்து பரவிய தகவல் போலியானது: நிதி ஆயோக் தரப்பில் விளக்கம்

புதுடெல்லி: பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்குவது குறித்து பரவிய தகவல் போலியானது என நிதி ஆயோக் விளக்கமளித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து நிதி ஆயோக் பட்டியல் ஒன்றை வெளியிட்டிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த போலியானது என நிதி ஆயோக் கூறியுள்ளது.

இதுதொடர்பாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து நிதி ஆயோக் தகவல் வெளியிட்டிருப்பதாக ஒரு போலியான பட்டியல் ஊடகங்களில் பரவி வருகிறது. இதுபோன்ற எந்த ஒரு பட்டியலையும் நிதி ஆயோக் எந்த வடிவத்திலும் வெளியிடவில்லை என்பது தெளிவுபடுத்தப்படுகிறது’ என்று கூறியுள்ளது.

Related Stories: