பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல இதுவரை 1.62 லட்சம் பேர் முன்பதிவு: போக்குவரத்துத்துறை தகவல்

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல இதுவரை 1.62 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னை மற்றும் பிற நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாட விரும்புவர். இதற்காக தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் ஜன.12, 13, 14 ஆகிய 3 நாட்களில் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு ஜன.14ம் தேதி முதல் 17ம் தேதி வரை நான்கு நாட்கள் அரசு விடுமுறை என்பதால் அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர் வெளியூர் பயணத்திற்கு 4 மாதங்களுக்கு முன்பே  ரயில்களில் முன்பதிவு செய்துவிட்டனர். வழக்கமாக செல்லும் ரயில்கள்  அனைத்தும் நிரம்பிய நிலையில் அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களிலும்  காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக பெரும்பாலான மக்கள் அரசு பேருந்துகளை நம்பி தான் வெளியூர் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

அரசு பேருந்துகளில்  கடந்த மாதம் 12ம் தேதி முதல் முன்பதிவு தொடங்கியது. தற்போது சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் பயணம் மேற்கொள்ள தற்போது பயணிகள் வேகமாக முன்பதிவு செய்து வருகின்றனர். இதுவரை சிறப்பு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள 1.62 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என போக்குவரத்துத்துறை  தெரிவித்துள்ளது.

Related Stories: