இங்கிலாந்து மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: இங்கிலாந்து மன்னராக 3ம் சார்லஸ் பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக அவருடன் நேற்று உரையாடினார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ‘‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மீள்தன்மை, பல்லுயிர் பாதுகாப்பு, எரிசக்தி மாற்றத்திற்கான புதுமையான தீர்வுகள் மற்றும் காமன்வெல்த் உள்ளிட்ட இருதரப்பு நலன்கள் குறித்து மன்னர் 3ம் சார்லசுடன் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், இந்தியாவின் ஜி20 தலைமையின் முன்னுரிமைகள் குறித்து விவாதித்தோம்’’ என குறிப்பிட்டுள்ளார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே வாழும் பாலமாக செயல்பட்டு இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் இங்கிலாந்தில் வாழும் இந்திய மக்கள் மகத்தான பங்களிப்பை தருவதாக இரு தலைவர்களும் பாராட்டினர்.

Related Stories: