தேர்தல் ஆணைய கடிதத்தை திருப்பி அனுப்பிய இபிஎஸ் தனிக்கட்சி தொடங்கலாம்: வைத்திலிங்கம் பேட்டி

தஞ்சாவூர்: தமிழக தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்பியதால், இபிஎஸ் தனி கட்சி தொடங்கலாம் என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் ஓபிஎஸ் அணி ஆதரவாளரான அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் நேற்று அளித்த பேட்டி:

இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய ஆவணங்களின்படி, தமிழக தேர்தல் ஆணையம் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதை திருப்பி அனுப்பியதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறது. அதை திருப்பி அனுப்பியதால், இபிஎஸ் அதிமுகவை விட்டு வெளியேறி தனிக்கட்சி தொடங்கலாம். அதிமுகவில் இருப்பதற்கு அவருக்கு தகுதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: