மக்களவை தேர்தலில் ஆட்சி மாற்றம்: சஞ்சய் ராவுத் நம்பிக்கை

மும்பை: சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னாவில் அக்கட்சி எம்பி சஞ்சய் ராவுத்  எழுதி உள்ள கட்டுரையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர்  மக்களிடம் வெறுப்புணர்வு மற்றும் பிரிவினையை விதைக்கக்கூடாது. ராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால் ராமர் கோயில் பற்றி பேசி வாக்கு சேகரிக்க முடியாது.  அதனால் ,லவ் ஜிகாத் என்ற புதிய விஷயம் கையில் எடுக்கப்பட்டுள்ளது.

லவ் ஜிகாத் என்ற ஆயுதம் தேர்தலில் வெற்றி பெறவும், இந்துக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவும்  பயன்படுத்தப்படுகிறதா? கடந்த மாதம் துனிஷா சர்மா என்ற பெண் இறந்தார். அதற்கு முன்பு ஷ்ரத்தா வாக்கர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த 2 பெண்கள் கொலையிலும் லவ் ஜிகாத் கிடையாது. எந்த ஒரு சமுதாயம் அல்லது மதத்தை சேர்ந்த பெண்ணும் கொடுமைகளுக்கு ஆளாகக்கூடாது.

இந்த புத்தாண்டில் நாட்டின் நம்பிக்கையில் எந்த ஒரு அச்சமும் இல்லை. கடந்த ஆண்டில் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைபயணத்தால் காங்கிரசுக்கு புது ஒளியை கொடுத்தது.  ஒற்றுமை நடைபயணம் வெற்றி பெற்றால் அடுத்த மக்களவை பொது தேர்தலில் ஆட்சி மாற்றத்தை பார்க்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: