ராகுல் நடைபயணம் உபியில் நுழைகிறது: 9 நாள் ஓய்வுக்குப் பின் நாளை மீண்டும் துவக்கம்

லக்னோ: காங்கிரஸ் முன்னாள தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் 9 நாள் ஓய்வுக்குப் பின் நாளை மீண்டும் தொடங்கி, உத்தரப்பிரேதச மாநிலத்தில் நுழைகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இப்பயணம் பல்வேறு மாநிலங்களைக் கடந்து கடந்த மாதம் 24ம் தேதி டெல்லி வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை குளிர்கால ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 9 நாள் ஓய்வுக்குப் பின் ராகுலின் நடைபயணம் நாளை மீண்டும் தொடங்குகிறது.

டெல்லியின் காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள அனுமன் கோயிலில் இருந்து தொடங்கும் இப்பயணம் பிற்பகலில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் காஜியாபாத்தில் நுழைகிறது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் ராகுல் நடைபயணத்தை ஒட்டி தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உபியில் வரும் 4, 5ம் தேதிகளில் 120 கிமீ தொலைவுக்கு நடக்கும் நடைபயணம், 5ம் தேதி மாலை அரியானாவின் பானிபட் நகருக்குள் நுழைகிறது.

Related Stories: