ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டு சிறை

பாங்காங்: மியான்மரில் தேசிய ஜனநாயக லீக் கூட்டணி தலைமையிலான ஆட்சியை கலைத்துவிட்டு ராணுவ ஆட்சி நடந்து வருகின்றது. இதனைதொடர்ந்து  முன்னாள் அரசு ஆலோசகரான ஆங் சான் சூகி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இதில் அவருக்கு ஏற்கனவே 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மேலும் 5 வழக்குகளில் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதில் சூகிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கான மொத்த சிறை தண்டனை 33 ஆண்டுகளாகி உள்ளது.

Related Stories: