ஆசீர்வாதம் செய்வதாக ரூ2 ஆயிரம் அபேஸ்; திருநங்கைகள் உள்பட 4 பேர் பிடிபட்டனர்

துரைப்பாக்கம்: நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் யமுனா (47). இவர், நேற்று முன்தினம் பாலவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகளை அழைத்து வருவதற்காக சென்று, பள்ளியின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 திருநங்கைகள் மற்றும் ஒரு பெண், யமுனாவிடம் வந்து பணம் கேட்டனர். யமுனா அவர்களுக்கு பர்சிலிருந்து 10 ரூபாய் எடுத்து கொடுத்துள்ளார். அப்போது, திருநங்கைகள் பர்சுக்கு திருஷ்டி சுற்றி ஆசீர்வாதம் செய்வதாக கூறி, அதிலிருந்த ரூ2 ஆயிரத்தை அபேஸ் செய்து தப்பினர்.

இதுகுறித்து, யமுனா நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிசிடிவி பதிவு மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பெரம்பூர் டாக்டர் அம்பேத்கர் நகர் 8வது தெருவை சேர்ந்த திருநங்கை சந்துரு (எ) கிருத்திகா (19), புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த திருநங்கை திரிஷா (எ) தினகரன் (18), பேசின்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோகுல்தாஸ் (30), புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பெண் கவுரி (45) ஆகிய 4 பேரை போலீசார் கைது  செய்து, அவர்களை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: