மேற்கு வங்கத்தில் ரூ.7800 கோடிக்கு வளர்ச்சி திட்ட பணிகள்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் ரூ.7800கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மேற்கு வங்க மாநிலத்திற்கு இன்று செல்லும் பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கின்றார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகின்றார். ரூ.2,550கோடி மதிப்பிலான கழிவுநீர் கால்வாய் உட்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். பல்வேறு ரயில் திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர், நியூ ஜால்பாய்குரி ரயில்நிலையத்திற்கான மறுசீரமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகின்றார். மேலும் மாநிலத்தில் முதல் வந்தே பாரத் ரயில் சேவையையும் பிரதமர் கொடி அசைத்து தொடங்கி வைக்கின்றார். மொத்தம் ரூ.7800கோடி வளர்ச்சி பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கின்றார். தேசிய கங்கை கவுன்சிலின் இரண்டாவது கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்கிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: