கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 1170கனஅடியாக அதிகரிப்பு

கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம் தென்பெண்ணையாற்று பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஓசூர் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று 613 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 500கனஅடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு 500கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 44.28அடியில் தற்போது, 40.34 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நேற்று 1040 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1170கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து ஆற்றில் விநாடிக்கு 1170 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் மொத்த உயரமான 52அடியில் தற்போது 51.80அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்றும் மழை பெய்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் பனிமூட்டம் அதிகளவில் காணப்பட்டது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர். பனிமூட்டம், குளிர் அதிகமாக இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு(மில்லி மீட்டரில்) : பாரூர் 9.60, நெடுங்கல் 9,40, சூளகிரி 7, ஓசூர் 5.30, தளி 5, சின்னாறு டேம் 5, கெலவரப்பள்ளி டேம் 5, கிருஷ்ணகிரி 4.80, தேன்கனிக்கோட்டை 3.20, போச்சம்பள்ளி 2.10, அஞ்செட்டி 2, கேர்பி டேம் 1.60, பெணுகோண்டாபுரம் 1.30, ஊத்தங்கரை 1 என மொத்தம் 62.30 மில்லி மீட்டர் மழை பதிவாகிஉள்ளது.

Related Stories: