மாணவிக்கு மாணவன் தாலி கட்டிய விவகாரம் விசாரணை சிறார் நீதி குழுவுக்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு சக மாணவன் மஞ்சள் கயிற்றை கட்டிய விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவிக்கு, சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாணவன் கைதுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், போக்ஸோ மற்றும் சிறார் குற்றங்களை காவல்துறை கையாள்வது குறித்தும் புதிய விதிகளை வகுக்க ஆலோசனைகளை தெரிவித்திருந்தனர். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவிக்கு மஞ்சள் கயிறு கட்டியது தொடர்பாக காவல்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணை கடலூர் சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றப்படுகிறது.

போக்ஸோ மற்றும் சிறார் குற்றங்களை காவல்துறை கையாள்வது குறித்தும் இந்த நீதிமன்றம் அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டியுள்ளதால் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறோம். அந்த சிறப்பு அமர்வில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இடம் பெற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: