மாதவரம் வடக்கு பகுதி திமுக ஆலோசனை கூட்டம்

 

திருவொற்றியூர், மே 28: மாதவரம் வடக்கு பகுதி திமுக சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாத்தூரில் நடந்தது. பகுதிச் செயலாளர் புழல் எம்.நாராயணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நலியுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, விளையாட்டு, பட்டிமன்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது,
தேர்தல் பணியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளில் 24 நாட்கள், 8465 கிலோ மீட்டர் பயணம் செய்து, 122 பிரசார கூட்டங்கள் மூலம், 3726 நிமிடங்களில் 1.24 கோடி மக்களை சந்தித்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகி தாமரைச்செல்வன், கண்ணப்பன், கருணாகரன், சந்துரு, குப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post மாதவரம் வடக்கு பகுதி திமுக ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: