ரபேல் வாட்ச் சர்ச்சை நீடித்து வரும் நிலையில் ரூ.345 மதிப்புள்ள கருவியை ரூ.10,000 என சொன்னாரா அண்ணாமலை: சமூக வலைதளங்களில் மீண்டும் வைரல்

சென்னை: ரூ.345 மதிப்புள்ள கருவியை ரூ.10,000 என சொல்லி பொதுமக்களிடம் வழங்கியதாக அண்ணாமலை மீது மீண்டும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை  எப்போதும் தன்னை ஒரு நேர்மையான தலைவர் என்றும், காவல் துறையில் பணியாற்றிய  போதும் கண்ணியத்தோடு இருந்த அதிகாரி என்றும் சொல்லி வருபவர். தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை பதவிவேற்றதிலிருந்து தமிழகத்தில் பாஜவை வளர்க்க வேண்டும் என தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார். இருந்தாலும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் தர இயலாதபோது  தரக்குறைவாக பேசுவது அவரது வாடிக்கையாக இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது தன்னை ஒரு விவசாயி,  எளிய வீட்டுப்பிள்ளை என்றெல்லாம் சொல்லி வந்த அண்ணாமலை கையில்  அணிந்திருந்த வாட்ச்சின் விலை ரூ.5 லட்சம் என தெரியவந்ததையடுத்து பலரும்  அண்ணாமலைக்கு இவ்வளவு மதிப்புள்ள வாட்ச் வாங்க பணம் எங்கிருந்து வந்தது,  பில் எங்கே என பல்வேறு கேள்வி எழுப்பி வருகின்றனர். பிரான்ஸ் நிறுவனத்திற்காக உலகில் வெறும் 500 கைக்கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள ரபேல் வாட்ச் வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் அண்ணாமலை கட்டியிருக்கிறார் என அமைச்சர் செந்தில் பாலாஜி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் சொன்ன அண்ணாமலை ஏப்ரல் மாதம் இதற்கு பதில் தருகிறேன் என்று கூறிவிட்டார். இதனால் ரபேல் வாட்ச் சர்ச்சை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், கோயம்புத்தூரில் நேற்று முன்தினம் பாஜ சார்பில் காது கேளாதோர் 100 பேருக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியபோது, ரபேல் வாட்ச்சிக்கான பில்லை கொடுப்பீர்களா என கேட்டு வருகிறார்கள்.  ரபேல் வாட்ச்சியை பற்றி என்றைக்கு டீக்கடை வரை பேசப்படுகிறதோ, அப்போது அந்த வாட்ச்சிக்கான  பில்லை வெளியிடுவேன் என்று சொன்னதோடு,  இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படும் காது கேட்கும் கருவி ஒவ்வொன்றும் ரூ.10 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும். இதை தான் உங்களுக்கு வழங்குகிறோம் என்றார்.

காதுக்கேட்கும் கருவியின் விலை ரூ.10 ஆயிரம் என அண்ணாமலையின் இந்த கருத்தால், அதிர்ந்துபோன நெட்டிசன்கள் இந்த காது கேட்கும் கருவி குறித்து ஆராய்ச்சியில் இறங்கினர். உண்மையில் அந்த கருவின் விலை ரூ.345 மட்டுமே, இது ஒரு சைனா நிறுவனத்தின் தயாரிப்பு என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதிகம் சத்தம் எழுப்பக்கூடிய தரமில்லாத கைப்பேசிகளை தான் நாம் சைனா போன் என்று வழக்கத்தில் சொல்லுவோம். அப்படி ஒரு சைனா தயாரிப்பின் கருவியைதான் 10 ஆயிரம் ரூபாய் விலை என்று அண்ணாமலை சொல்கிறார்.

நல்லவேளை அந்த நேரத்தில் அவர்களில் யாரும் அந்த காது கேட்கும் கருவியை காதில் போட்டுகொள்ளவில்லை..!  உண்மையாகவே அந்த கருவின் விலையானது, ரூ.1999 தான். இந்த கருவி  6 வால்யூம் லெவல் வரை 40 டெசிபல் வரை கேட்கக்கூடியது. இதைத்தான் அமேசான் நிறுவனம் 83% தள்ளுபடி கொடுத்து ரூ.345க்கு தற்போது விற்பனை செய்து வருகிறது. கிட்டத்தட்ட பாஜ மாநில தலைவர் அண்ணாமலை காது கேட்கும் கருவியின் விலையை பல மடங்கு உயர்த்தி சொல்லி இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இதுவும் இணையதளத்தில் வெளியானது. ஆனால் உண்மையில் இது ரூ.10 ஆயிரம்தான் என நேற்று இரவு வரை அண்ணாமலையோ, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோ பில்லை வெளியிடவில்லை.

* காது கேளாதோர் கருவி ரூ.9 லட்சமா?

ஒரு கருவியின் உண்மை விலை ரூ..345 என்றால் 95 பேருக்கு கருவி வாங்கிய செலவு ரூ..32,775 மட்டுமே ஆகியிருக்கும். ஆனால் அண்ணாமலை சொன்னபடி பார்த்தால், 95 பேருக்கு தலா ரூ..10,000 என்றால் ரூ..9,17,225 ஆகியிருக்கும்.

* அண்ணாமலையின் பொய்கள்... செந்தில்பாலாஜி மீண்டும் அதிரடி

செந்தில்பாலாஜி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டரில், சத்திரபதி சிவாஜி 1967ல் சென்னை வந்தார். 37 வயதுக்குள் படித்தது 20,000 புத்தகம், கணுக்கால் தண்ணீரில் டைட்டானிக் ட்ராமா, 9 வருட சர்வீஸில் (போலீஸ் வேலையில்) 2 லட்சம் கேஸ், 4 ஆடு வளர்த்து 5 லட்சம் வாட்ச், ரூ.345 மெஷின் ரூ.10,000 என கிண்டலாக கூறியுள்ளார்.

Related Stories: