கம்பம் அருகே உழவர் நலத்துறை சார்பில் நெல் வயல்களில் நானோ யூரியா-இலைவழி தெளிப்பு செயல் விளக்கம்

கம்பம் : கம்பம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக அட்மா திட்டத்தின் கீழ் நெல் வயல்களில் நானோ யூரியா திரவம் இலை வழி தெளிப்பு செயல் விளக்கம் விவசாயிகள் முன்னிலையில் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் நெற்பயிருக்கு தழைச்சத்து உள்ள திரவ யூரியாவை நேரடியாக உரமிடல் அல்லாமல் இலை வழி தெளிப்பு மூலம் வழங்கும்போது 1 ஏக்கர் நெற்பயிருக்கு பயன்படுத்தப்படும் ஒரு மூட்டை யூரியா என்ற அளவு குறைக்கப்பட்டு 500 மில்லி நானோ யூரியா திரவனம் பயன்படுத்தினால் போதுமானது என தெரிவிக்கப்பட்டது.

மேலும் யூரியா உரத்தில் உள்ள தழைச்சத்து வீணாகமல் 80 முதல் 90 சதவீதம் வரை பயிருக்கு கிடைப்பதாக கம்பம் வட்டார அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர்கள் கவுரிநிவாஸ், இளம்பரிதி, குமார் ஆகியோர் தெரிவித்தனர். இந்த முகாமில் கம்பம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பூங்கோதை, வேளாண்மை அலுவலர் மகாவிஷ்ணு, குள்ளப்பரம் வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: