சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணி குற்றமற்றவர் என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணி குற்றமற்றவர் என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணி. இவர் சென்னையில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாகவும், தமிழக அமைச்சர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், சிலை திருட்டு தொடர்பான சிறப்பு பெஞ்சை கலைத்ததாகவும், தஹில் ரமணி மீது சிபிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார்.

சிபிஐ விசாரணையில், நீதிபதி தஹில் ரமணி மீது எந்த குற்றமும் இல்லை என தெரிய வந்திருப்பதாக ஒன்றிய அரசு தற்போது நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது பில்கிஸ் பனோ குற்றவாளிகளுக்கு  தண்டனை வழங்கியவர் நீதிபதி தஹில் ரமணி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: