டெல்லி: மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் இருந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வடதமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று கனமழை பெய்யும் எனவும் வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் 13ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
