புதுவை இளம்பெண்ணிடம் ரூ.35 லட்சம் மோசடி: வாலிபர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி நகர பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பட்டதாரி பெண்ணிடம், ஆன்லைன் மூலம் லண்டனில் வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக இமெயில் மூலமாக மர்மநபர் அணுகியுள்ளார். அப்போது பாஸ்போர்ட், விசா, விமான டிக்கெட் உள்ளிட்ட விபரங்களை ேகட்ட அந்த நபர் செலவினங்களுக்காக ரூ.35 லட்சம் கேட்டுள்ளார். பட்டதாரி பெண்ணும் இதை உண்மை என நம்பி பல்வேறு தவணைகளில் ஆன்லைன் மூலம் சம்பந்தபட்ட நபருக்கு ரூ.35 லட்சத்தை அனுப்பி உள்ளார். அதன்பின்னர் அந்த மர்மநபர் தொடர்பை துண்டித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், மோசடியில் ஈடுபட்ட நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரித்ததில் அவர் பெங்களுரூவில் தங்கி  இருப்பது தெரியவந்தது. உடனே அங்கு சென்று அவரை கைது செய்து புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர்.

அவர் நைஜீரியாவை சேர்ந்த ரூபின் (26) என்பதும், பெங்களூருவில் தங்கி இதுபோன்று பட்டதாரிகளை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பின்னர் அவரை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: