செல்பி எடுத்துக் கொண்டே டவுன்பஸ் ஓட்டிய டிரைவர்: வீடியோ வைரல்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பஸ் நிலையத்திலிருந்து நேற்று காலை முதுகுளத்தூருக்கு அரசு டவுன் பஸ் சென்றபோது, டிரைவர் செல்பி எடுத்துக் கொண்டே பஸ்சை இயக்கினார். இதனை பஸ்சில் சென்ற பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட அது வைரலாக பரவி வருகிறது. டிரைவர் செல்பி எடுத்துக் கொண்டிருக்கும் போது எதிரே வாகனங்கள் அதிகளவில் சென்று கொண்டிருப்பது இந்த வீடியோவில் தெரிகிறது. பஸ்சில் 40க்கும் மேற்பட்டோர் பயணிக்கும்போது ஆபத்தை உணராமல் செல்பி வீடியோ எடுத்துக் கொண்டே பஸ்சை இயக்கிய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: