21 வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி அதிரடி கைது

சென்னை: கத்தி முனையில் ஜூஸ் கடைக்காரரை மிரட்டி செல்போன் பறித்த வழக்கில், 5 கொலை முயற்சி உள்ளிட்ட 21 வழக்கில் தொடர்புடைய ரவுடியை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (40). இவர், சென்னை தி.நகர் கண்ணம்மாபேட்டை பகுதியில் தங்கி ஜூஸ் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் கடந்த 4ம் தேதி இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். தி.நகர் கண்ணம்மா பேட்டை காமராஜர் காலனியில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் அருகே நடந்து சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (27) குடிபோதையில் தேவேந்திரனை கத்தி முனையில் வழிமறித்து செல்போனை பறித்துள்ளார்.

இதுகுறித்து தேவேந்திரன் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, தி.நகர் கண்ணம்மா பேட்டை காமராஜர் காலனியை ேசர்ந்த 5 கொலை முயற்சி உள்ளிட்ட 21 வழக்கில் தொடர்புடைய ரவுடி சதீஷை அதிரடியாக ைகது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. பெரம்பூர்: எம்கேபி நகர் போலீசார் நேற்று முன்தினம் வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் சிறுசிறு பொட்டலங்களாக 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. விசாரணையில், அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி குடிசை மாற்று வாரியத்தை சேர்ந்த ஹரிஷ் குமார் (எ) ஹரிஷ் (27) என்பதும், அயனாவரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிந்தது.

வியாசர்பாடி குடிசை மாற்று வாரிய பகுதியில் இரவு நேரம் கஞ்சா விற்று வந்துள்ளார். போலீசார் ஹரிஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தண்டையார்பேட்டை: உ.பி.யைச் சேர்ந்தவர் சந்தீப் (19), கொத்தவால்சாவடி பகுதியில் பானிபூரி கடையில் வேலை செய்கிறார். சம்பவத்தன்று கொண்டித்தோப்பு சுந்தரமுதலி தெரு அம்மன் கோயில் தெரு சந்திப்பில் இவரை இருவர் கத்திமுனையில் மிரட்டி செல்போன், பணத்தை பறித்துச்சென்றனர். ஏழுகிணறு, போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில், யானைகவுனியை சேர்ந்த பிரதீப் (20), கூட்டாளி 17 வயது சிறுவன் வழிப்பறி செய்தது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர். பிரதீப்பை புழல் சிறையிலும், சிறுவனை கெல்லீஸ் சிறுவர்கள் காப்பகத்திலும் அடைத்தனர்.

Related Stories: