வேறு தேசிய சின்னமே கிடையாதா? ஜி20 சின்னத்தில் இருந்து தாமரையை மாற்றுங்கள்: மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு

கொல்கத்தா: ‘ஜி20 சின்னத்தில் தாமரைக்கு பதிலாக தேசிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்த வேண்டும்’ என மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார். வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா கடந்த 1ம் தேதி ஏற்றுக் கொண்டது. இதற்காக சமீபத்தில் இந்திய தலைமைக்கான ஜி20 சின்னம் வெளியிடப்பட்டது. அதில் தாமரை மலர் இடம் பெற்றிருந்ததற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.  

இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டிற்கான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்லும் முன்பாக கொல்கத்தா விமான நிலையத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், ‘‘தாமரை என்பது தேசிய மலர். அதோடு அது ஒரு கட்சியின் சின்னமாக இருப்பதையும் மறுக்க முடியாது.

இன்னும் பல தேசிய சின்னங்கள் உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தியிருக்கலாம். இந்த விவகாரம் நம் நாடு சம்மந்தப்பட்ட விஷயம். இதைப் பற்றி விமர்சிப்பது வெளியில் தெரியவந்தால், அது நாட்டிற்குதான் கெட்ட பெயர் ஏற்படும் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: