கவர்னருக்கு எதிரான மசோதா கேரள சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையின் 7வது கூட்டத்தொடர் இன்று (5ம்தேதி) தொடங்கியது. கடந்த கூட்டத்தொடர் வரை சபாநாயகராக இருந்த எம்.பி. ராஜேஷ் உள்ளாட்சித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தலச்சேரி தொகுதி சிபிஎம் எம்எல்ஏவான ஷம்சீர் புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்டார். புதிய சபாநாயகர் தலைமையில் சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. 9 நாட்கள் நடைபெற உள்ள கூட்டத்தொடரில் கேரளாவில் உள்ள 14 பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்கும் மசோதாவை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்க தீர்மானித்து உள்ளது.

இது தவிர விழிஞ்ஞம் அதானி துறைமுகத்திற்கு எதிராக மீனவர்களின் போராட்டம், திருவனந்தபுரம் மாநகராட்சியில் சிபிஎம் தொண்டர்களுக்கு சட்டத்தை மீறி மேயர் ஆர்யா ராஜேந்திரன் பணி நியமனம் வழங்க முயற்சித்த விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்களால் இந்த கூட்டத் தொடர் முழுவதும் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்கும் மசோதா தவிர, போலி மந்திரவாதம் மற்றும் மூடப்பழக்கங்களுக்கு எதிரான மசோதா உள்பட 9 மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Stories: