வேப்பூர் கூட்ரோட்டில் சாலையோரம் கிடக்கும் குப்பையால் நோய் பரவும் அபாயம்

வேப்பூர் : வேப்பூர் கூட்ரோடு வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. அதேபோல் வேப்பூரை‌ சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களது அன்றாட தேவைக்காக ஆயிரக்கணக்கானோர் வேப்பூர் கூட்ரோடு பகுதியில் கூடி வருகின்றனர். இந்நிலையில் வேப்பூர் கூட்ரோட்டில் மின்வாரிய அலுவலகம் அருகே சேலம் - விருத்தாசலம் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் அப்பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீசுவதோடு, அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது.

மேலும் சுகாதாரமற்ற நிலையில் கொட்டிக்கிடக்கும் குப்பையால் அப்பகுதியில் பன்றிகள் கூட்டமாக சுற்றித்திரிகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் அவ்வழியே செல்லும் குழந்தைகள், பெரியவர்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வேப்பூர் ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கு முன் குப்பைகளை அகற்றி சுகாதார சீர்கேட்டை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: