போருக்கு தயார் இந்தியாவை சீண்டும் பாக். ராணுவ புதிய தளபதி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாகவும், எந்த போரையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் அந்நாட்டின் ராணுவ தளபதியாக புதிதாக பதவியேற்ற ைசயத் ஆசிம் முனீர் கூறினார். பாகிஸ்தான் ராணுவ   தளபதியாக சையத் ஆசிம் முனீர் அண்மையில் பதவி ஏற்றார்.

அவர் பாகிஸ்தான் நாளேடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியா தரப்பில் சிலர் பொறுப்பற்ற முறையில் பேசுகிறார்கள். பாகிஸ்தான் ராணுவம் எப்போதுமே தயார் நிலையில் இருக்கிறது. எங்களது தாய் நாட்டை காக்கவும், எதிரியை எதிர்த்து போரிடவும் தயாராக இருக்கிறோம். போர் எங்கள் மீது திணிக்கப்பட்டால் அதை எதிர்கொள்ளவும் தயார். இவ்வாறு சையத் ஆசிம் முனீர் கூறினார்.

இந்தியாவை சீண்டும் வகையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி இந்திய வெளியுறவுத் துறை உடனடியாக கருத்து எதையும் தெரிவிக்க வில்லை.

Related Stories: