இரவில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

சென்னை: எழும்பூரை சேர்ந்தவர் அமல் முகமது (20). இவர், தனது நண்பர் முகமது ஆசிப் (27) என்பவருடன் தேனாம்பேட்டை கதீட்ரல் சாலையில் அக்டோபர் 19ம் தேதி நடந்து சென்றபோது, 7 பேர் செல்போன்களை பறித்தனர். இருவரும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் அப்பகுதியில் இருந்து புளியந்தோப்பு, கல்யாணபுரம் பகுதி வரை சுமார் 60க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர், அதில்  புளியந்தோப்பு மூர்த்தி நகர் அஜித்குமார் (20) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories: