கொரோனா வழக்குகள் 1 லட்சம் வாபஸ்: கேரளா அரசு முடிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா காலத்தில் விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட 1 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம், முதல் கட்ட கொரோனா அலை வீசியது. அப்போது அனைத்து மாநிலங்களிலும் முழு லாக் டவுன் அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் பொது இடங்களில் செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக கவசம் கட்டாயமாக்கப்பட்டது. இதை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா காலத்தில் விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட 1 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. சாதாரண பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மட்டுமே வாபஸ் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வேணு, டிஜிபிக்கு  உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: