காங்கிரசில் இருந்து வெளியேறி விமர்சிக்கும் ஜோதிராதித்யா சிந்தியா 24 காரட் துரோகி: ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு

அகர்மால்வா: காங்கிரசில் இருந்து வெளியேறி விமர்சிக்கும் ஜோதிராதித்யா சிந்தியா 24 காரட் துரோகி என்று ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சனம் செய்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை யாத்திரை மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள அகர் மால்வா அடைந்தது. அப்போது மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:   காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்யா சிந்தியா  ஒரு  துரோகி. உண்மையான 24 காரட் துரோகி. கட்சியில் இருந்து  வெளியேறிய பிறகு மூத்த தலைவர் கபில் சிபல் கட்சியை விமர்சனம் செய்யவில்லை. அவரைப் போன்றவர்கள் கட்சிக்கு திரும்ப வர அனுமதிக்கப்படலாம். ஆனால் சிந்தியா அல்லது அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா போன்றவர்களை அனுமதிக்க முடியாது. காங்கிரசை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் வரவேற்கக் கூடாது என்று நினைக்கிறேன்.  இவ்வாறு  கூறினார்.

Related Stories: