நீதித்துறையை சேர்ந்த விஐபி இளம்பெண்ணுடன் உல்லாசம்; நள்ளிரவில் வழக்கை விசாரித்த நீதிபதி

புதுடெல்லி: நீதித்துறையை சேர்ந்த முக்கிய விஐபி ஒருவர், இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட, டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. டெல்லியில் நீதித்துறையில் முக்கிய பதவி வகிக்கும் ஒருவர், இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ கடந்த மாதம் 29ம் தேதி வெளியானது. நீதித்துறையை சேர்ந்தவர்களுக்கு முதலில் இந்த வீடியோ அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஒரு சில முக்கிய சமூக வலைதள ஊடகங்களிலும் இந்த வீடியோ வெளியானது. இதை எதிர்த்தும், இந்த வீடியோவை வெளியிட தடை விதிக்கும்படியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய நபர், அவசர வழக்கை தாக்கல் செய்தார். இந்த வீடியோ மேலும் பரவினால், தனக்கு அனைத்து வகையிலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என மனுவில் அவர் தெரிவித்தார்.

இதை உடனடியாக விசாரிக்கும்படியும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவே இந்த வழக்கை தை விசாரித்த நீதிபதி வர்மா, இந்த வீடியோ வெளியிடக் கூடாது என அனைத்து சமூக வலைதள ஊடகங்களுக்கும் தடை விதித்தார். மேலும், வெளியான வீடியோவில் உள்ள உருவத்தை மறைக்கும்படியும் உத்தரவிட்டார். இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி ஒன்றிய அரசுக்கும், வீடியோ வெளியான முக்கியமான 4 சமூக வலைதள ஊடகங்களுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories: