போலி சிபிஐ அதிகாரி வழக்கு விசாரணை; அமைச்சர், எம்பியிடம் சிபிஐ விசாரணை

திருமலை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சின்னவால்தேர் அருகே உள்ள கிர்லாம்பூடி கிராமத்தை சேர்ந்த போலி சி.பி.ஐ. அதிகாரி ஸ்ரீ னிவாஸ் ராவ், அமலாக்கத்துறையில் கிரானைட் வழக்கில் சிக்கிய தெலங்கானா மாநில உணவு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கங்குலா கமலாகர் மற்றும் எம்.பி. ரவிசந்திராவிடம்  பெரும் பேரம் நடந்ததாகவும்  இதற்காக 25 லட்ச ரூபாய் தங்க நகையை பரிசாக ரவிசந்திரா ஐதராபாத்தில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் ஸ்ரீ நிவாஸிடம் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது.

இந்தநிலையில், டெல்லியில் போலி சிபிஐ அதிகாரி ஸ்ரீ நிவாஸ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, அமைச்சர் கங்குலா கமலாகர் மற்றும் எம்பி வாவிராஜூ ரவிச்சந்திரா ஆகியோர் சி.பி.ஐ. முன்பு ஆஜராகினர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Related Stories: