இரட்டைச் சதங்கள் விளாசிய ஆஸி வீரர்கள்

பெர்த்: ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி 90ஓவருக்கு 2 விக்கெட்களை இழந்து 293ரன் எடுத்தது. களத்தில் இருந்த  மார்னஸ் லாபுஷேன் 154,  ஸ்டீவன் ஸ்மித் 59 ரன்னுடன் 2வது நாளான நேற்று  2வது இன்னிங்சை தொடர்ந்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய லாபுஷேன்  இரட்டைச் சதம் விளாசி 204ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் ஸ்மித்துடன்சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு  251ரன் குவித்தார். இடையில் சதம் அடித்த ஸ்மித்  இரட்டைச்சதமும் விளாசினார். அவருடன் களத்தில் இருந்த டிராவிஸ் ஹெட் 99 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

அத்துடன் ஆஸி டிக்ளேர் செய்தது. அப்போது ஆஸி 152.4ஓவருக்கு  4 விக்கெட்களை இழந்து 594ரன் குவித்திருந்தது. ஸ்மித் 200ரன்னுடன் களத்தில்  இருந்தார். வெ.இண்டீஸ் தரப்பில்  கிரெய்க் பிரெத்வைட் 2 விக்கெட் எடுத்திருந்தார். அதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெ.இண்டீஸ்   நேற்று ஆட்ட நேர முடிவில் 25ஓவருக்கு விக்கெட் இழப்பின்றி 74 ரன் எடுத்திருந்தது. களத்தில் உள்ள கேப்டன் பிரத்வைட்  18,  தேஜ்நாரயண் சந்திரபால் 47ரன்னுடனும் 3வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர உள்ளனர்.

Related Stories: