கடலூர் அருகே கிணற்றில் மிதந்தன சென்னையை சேர்ந்த தாய், மகள், பேத்தி சடலங்கள்

வேப்பூர்: கடலூர் அருகே விவசாய கிணற்றில் சென்னையை சேர்ந்த தாய், மகள், பேத்தி ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மூவரும் கொலை செய்யப்பட்டார்களா? என போலீசார் விசாரிகின்றனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மலையனூரை சேர்ந்தவர் சிவகுருநாதன் (39). பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுமதி. 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2016ல் கருத்து வேறுபாடு காரணமாக சுமதி தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே சிவகுருநாதன் சென்னை போரூருக்கு வேலைக்கு சென்றபோது அங்கு மிஸ்பா சாந்தி என்பவர் வீட்டில் தங்கியிருந்தபோது அவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.  

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சிவகுருநாதன் அடிக்கடி குடித்து விட்டு தகராறு செய்ததால் மிஸ்பாசாந்தி பிரிந்து சென்று விட்டார். இதனால் சிவகுருநாதன் 2019ல் மீண்டும் சொந்த ஊரான சிறுபாக்கம் வந்து மகள்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சென்னையில் வசித்த மிஸ்பா சாந்தி (35), அவரது மகள் அருள்ஹெலன் கிரேஸ் (8), மிஸ்பா சாந்தியின் தாய் தே போரல் கல்யாணி (60) ஆகிய மூவரும் கடந்த 27ம்தேதி மூவரும் மலையனூர் வந்து, சிவகுருநாதனுடன் தங்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சிவகுருநாதன் அவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றார்.

அங்கு அவர்கள் இல்லை, செல்போனில் தொடர்பு கொண்டபோதும் தொடர்பு கிடைக்கவில்லை. இதற்கிடையே நேற்று காலை 7 மணியளவில் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் மூவரது சடலங்களும் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்து சிறுபாக்கம் போலீசார் சடலங்களை கைப்பற்றினர். அவர்கள் கொலை செய்யப்பட்டனரா? அல்லது தற்கொலை செய்து கொண்டனரா என விசாரணை நடக்கிறது. இந்நிலையில் மூவரும் கிணறு இருக்கும் பகுதியை நோக்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் போலீசிடம் கிடைத்துள்ளது. இதையடுத்து வேப்பூர் போலீசார், பிரதே பரிசோதனை அறிக்கைக்கு பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: