சபரிமலை வரும் பக்தர்கள் பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது: கேரள உயர்நீதிமன்றம் கண்டிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை வரும் பக்தர்கள் பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலையில் கடந்த   2018 ம் ஆண்டு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால்   பம்பையில் பெரும் சேதம் ஏற்பட்டது. இங்கு வாகனங்களை நிறுத்தும் இடங்களும்   சேதமடைந்தன. இதனால் கடந்த சில வருடங்களாக பம்பையில் பக்தர்களின்   வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களது   வாகனங்களை பம்பையிலிருந்து சுமார் 21 கிமீ தொலைவிலுள்ள நிலக்கல்லில் தான் நிறுத்த வேண்டும்.

இங்கிருந்து பம்பை செல்ல கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பம்பையில்   ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுவதாக கேரள உயர்நீதிமன்றத்திற்கு புகார்கள்  சென்றன. இதையடுத்து பம்பையில் எந்தக் காரணம் கொண்டும் வாகனங்களை நிறுத்த  அனுமதிக்கக் கூடாது என்று நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன் மற்றும்  அஜித்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: