வேல்சை மிரட்டிய மார்கஸ் ராஷ்ஃபோர்ட்: வெற்றியுடன் 2 வது சுற்றுக்கு இங்கிலாந்து தகுதி

தோகா: 32 அணிகள் பங்கேற்றுள்ள 22வது பிபா உலககோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடந்து வருகிறது. இதில் 10வது நாளான நேற்று இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு அஹ்மத் பின் அலி ஸ்டேடியத்தில் நடந்த போட்டில் பி குரூப்பில்  உலக தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள வலுவான இங்கிலாந்து, 19வது இடத்தில் உள்ள வேல்ஸ் அணிகள் மோதின. இங்கிலாந்து முதல் போட்டியில் ஈரானை வீழ்த்தியநிலையில் 2வது போட்டியில், அமெரிக்காவுடன்  டிரா செய்திருந்தது.

இந்நிலையில் நேற்று வெற்றியுடன் அடுத்தசுற்றுக்கு நுழையும் முனைப்பில் களம் இறங்கியது. மறுபுறம் வேல்ஸ், முதல் போட்டியில் அமெரிக்காவுடன் டிரா, 2வது போட்டியில் ஈரானுடன் தோல்வியால் கட்டாய வெற்றி நெருக்கடியில் ஆடியது. இங்கிலாந்து வீரர்கள் தொடர்ச்சியாக வேல்ஸ் அணியின் தடுப்புகளை  உடைத்து கொண்டு கோல் களை அடிக்க போராடினார். ஆனால் இதற்கு வேல்ஸ் அணியினர் முட்டுக்கட்டை போட்டனர்.  முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்

காததால் 0-0 ன சமனில் இருந்தது.

2வது பாதி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே வேல்ஸ் வீரர் அம்பாடு செய்த தவறால் இங்கிலாந்துக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இந்த ஃப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்திய மார்கஸ் ராஷ்ஃபோர்ட் ஆட்டத்தின் 50வது நிமிடத்தில், இங்கிலாந்து அணிக்காக முதல் கோலை அடித்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து வேல்ஸ் மீள்வதற்குள் அடுத்த நிமிடத்திலேயே பில் ஃபோடன் 2வதுகோலை அடித்து பிரம்மிப்பு அளித்தார். இதன்பின்னர் வேல்ஸ் அணி எதிர்ப்பு ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறியது.

68வது நிமிடத்தில் மார்கஸ் ராஷ்போர்ட மேலும் ஒரு கோல் அடித்தார். ஆனால் வேல்ஸ் கடைசி வரை போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இங்கிலாந்து 3-0 என வெற்றி பெற்றது. பி பிரிவில் 2 வெற்றி, ஒரு டிரா என 7 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதல் இடம் பிடித்து ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றது. வேல்ஸ் ஒரு  புள்ளியுடன் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது.

இன்றைய போட்டி

பிபா உலக கோப்பை கால்பந்து தொடரில் 11வது நாளான இன்று 4 போட்டிகள் நடக்கிறது.

* இன்று இரவு 8.30 மணிக்கு  டி பிரிவில்  ஆஸ்திரேலியா-டென்மார்க் மோதுகின்றன.

* இரவு 8.30 மணிக்கு மற்றொரு போட்டியில் டி பிரிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-துனிசாவை சந்திக்கிறது.

* நள்ளிரவு 12.30 மணிக்கு சி பிரிவில் அர்ஜென்டினா-போலந்துமோதுகின்றன.

* நள்ளிரவு 12.30 மணிக்கு மற்றொரு போட்டியில் சி பிரிவில் சவுதிஅரேபியா-மெக்சிகோ பலப்பரீட்சை நடத்துகின்றன.

Related Stories: