இந்திய எல்லையில் பறந்த பாக். ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

அமிர்தசரஸ்: இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அடுத்த சாஹர்பூர் கிராமத்திற்கு அருகே பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சுட்டு வீழ்த்தியது. அந்த ட்ரோனில் வெள்ளை பாலிதீனில் சந்தேகிக்கப்படும் பொருளும் கட்டப்பட்டிருந்தது. அதனை மீட்ட பாதுகாப்பு படையினர், அதிலுள்ள பொருட்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் ராஜஸ்தானில் உள்ள கரன்பூர் இந்திய எல்லைப் பகுதியில், பாகிஸ்தானின் இருந்து ஊடுருவிய சப்தர் ஹுசைன் (39) என்பவனை, பாதுகாப்பு படையினர் இடுப்புக்குக் கீழே சுட்டு கைது செய்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு அமிர்தசரஸ் செக்டர் எல்லையில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய ட்ரோனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தனர். கடந்த ஆண்டு 97 ட்ரோன்கள் ஊடுருவிய நிலையில், இந்த ஆண்டு ஜூலை வரை மொத்தம் 107 ட்ரோன்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: