கேரளாவில் விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிரான போராட்டம் தீவிரம்: திருவனந்தபுரம் காவல் நிலையம் மீது நடத்திய தாக்குதலில் 36 போலீசார் காயம்

திருவனந்தபுரம்: கேரளாவில் விழிஞ்சம் துறைமுக போராட்டத்தில் கைதானவர்கள் விடுவிக்க கோரி திருவனந்தபுரம் காவல் நிலையம் மீது மீனவர்கள் நடத்திய தாக்குதலில் 36 போலீசார் காயமடைந்தனர். திருவனந்தபுரம் அருகே அதானி குழுமத்தால் கட்டப்பட்டு வர கூடிய  விழிஞ்சம் துறைமுகத்திற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். துறைமுக திட்டத்தை கைவிடக் கோரி 100 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற போராட்டம் தொடர்பாக பேராயர் மற்றும் 50 ஆயர்கள் உள்பட ஏராளமானவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை விடுவிக்க கோரி நேற்று இரவு மீனவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. திருவனந்தபுரம் காவல் நிலையத்தை சூறையாடியதுடன் படகு துடுப்பு மற்றும் இருப்பு  கம்பிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் டிஎஸ்பி உள்பட 36 போலீசார் காயமடைந்தனர். போராட்டத்தை தொடர்ந்து ஏற்கனவே கைதான 5 பேரில் 4 பேர் விடுவிக்கப்பட்டனர். வன்முறையில் தாக்குதலுக்கு உள்ளான 2 போலீசார் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 3000 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கும் போலீசார் 85 லட்சம் ரூபாய் மதிப்பில் பொது சொத்துக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: