நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையில்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது

கூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால், பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் வினாடிக்கு 1,250 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 682 கனஅடியாக குறைந்துள்ளது. 152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 138.20 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 682 கனஅடியாகவும், அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு வினாடிக்கு 511 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 6,672 மில்லியன் கன அடியாக உள்ளது.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69.75 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,257 கனஅடியாகவும், அணையிலிருந்து வினாடிக்கு 1,669 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 5,767 மில்லியன் கன அடியாக உள்ளது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக இருந்தது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 64 கனஅடியாகவும், அணையிலிருந்து வினாடிக்கு 30 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 100 மில்லியன் கனஅடியாக உள்ளது. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 132 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 435.32 மில்லியன் கனஅடியாக உள்ளது. மழை எங்கும் பதிவாகவில்லை.

Related Stories: