கோபி: கோபி அருகே கடன் தொல்லையால் உரக்கடைக்காரர் மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு மாவட்டம், கோபி அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி (54). இவர், கவுந்தப்பாடியில் உரக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சித்ரா (45). இவர்களது மகன் கார்த்திக் ராஜா (21). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். திருமூர்த்தி, சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு வங்கியில் கடன் பெற்று வீடு கட்டினார்.
உரக்கடையில் போதிய வருமானம் இல்லாததால் கடனை திரும்பி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து வங்கியில் இருந்து வீட்டுப்பத்திரத்தை பெற்று தனியார் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து கட்டினார்.