பழைய பென்சனுக்கு பஞ்சாப்பில் ஒப்புதல்

சண்டிகர்: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி  ஆட்சி நடக்கிறது. சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று  அக்கட்சி வாக்குறுதி அளித்தது. இந்நிலையில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், வேளாண் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் உயிரிழந்த 624 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்  வழங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.   

பழைய திட்டத்தின் கீழ் அரசு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. புதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை ஓய்வூதிய நிதிக்கு வழங்குகிறார்கள். அதனடிப்படையில் அவர்கள் ஓய்வு பெறும்போது, ஒரு  மொத்த தொகையை பெற உரிமையுடையவர்களாக கருதப்படுவர்.  ஏற்கனவே,  ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளன. கடந்த 2004ம் ஆண்டில் பழைய பென்சன் திட்டம் நிறுத்தப்பட்டது.

Related Stories: