குன்னூரில் தொடர் மழை காரணமாக பிரமாண்டமான பள்ளத்தாக்குகளில் ஆர்ப்பரிக்கும் அருவிகள்: சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுப்பு

குன்னூர்: குன்னூரில் தொடர் மழை காரணமாக  பிரமாண்டமான பள்ளத்தாக்கு நிறைந்த மலை இடுக்குகளில் நீர்விழ்ச்சி ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

வடகிழக்கு பருவ மழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அருவங்காடு, வெலிங்டன், பர்லியார், உலிக்கல், பில்லூர்மட்டம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பில்லூர் மட்டம் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

இது காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் இடுக்குகளில் பயணிக்கும் நீர் வீழ்ச்சி பில்லூர் மட்டம் அணைக்கு செல்கிறது. இந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை. அடர்ந்த வனப்பகுதி என்பதால் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது மழை காலம் என்பதால் புத்துயிர் பெற்று பெரிதும் வசீகரித்து வருகிறது இந்த நீர் வீழ்ச்சி.

Related Stories: