மத்திய பிரதேசத்தில் அட்டகாசம்; இளைஞரை தலைகீழாக தொங்கவிட்டு தாக்குதல்: நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

உஜ்ஜைனி: மத்தியபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை கட்டர் இயந்திரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இவ்விவகாரம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம் பத்நகர் அடுத்த இங்கோரியா பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை, கட்டர் இயந்திரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு கட்டையால் அவரை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அடிதாங்காமல் கதறும் இளைஞர், ‘இனிமேல் தவறு செய்யமாட்டேன்’ என்று அலறுகிறார். இவ்விகாரம் ெதாடர்பாக போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து உஜ்ஜைனி எஸ்பி சத்யேந்திர குமார் சுக்லா கூறுகையில், ‘இளைஞரை கட்டிபோட்டு தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் 4 நாட்களாக வைரலாகி வருகிறது. இவ்விவகாரம் குறித்து போலீசில் இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை.

இங்கோரியா போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். ஆனால் அவர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் அவர் தற்போது, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கொடூரமான இந்த சம்பவ வழக்கை பட்நகர் இன்ஸ்பெக்டர் விசாரித்து வருகிறார். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்’ என்றார்.

Related Stories: