இடைப்பாடி அருகே செந்நாய்கள் கடித்து 12 ஆடுகள் பலி

இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி சித்தூர் ரெட்டிப்பட்டி, முனியப்பன் கோயில் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்(57). இவர் வீட்டின் அருகே பட்டியில் 12 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் கட்டிவிட்டு சென்றார். இந்நிலையில் இன்று காலை ஆடுகளின் சத்தம் கேட்டது. அதனைகேட்டு பட்டிக்கு தங்கராஜ் சென்றபோது அங்கிருந்து 5க்கும் மேற்பட்ட செந்நாய்கள் ஓடியது. மேலும் பட்டியில் இருந்த 12ஆடுகளின் வயிறு, கழுத்து ஆகியவற்றை செந்நாய்கள் கடித்ததில் அவை உயிரிழந்திருப்பது தெரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற தாசில்தார் லெனின், ஆர்ஐ வனஜா, விஏஓ பர்வேஷ், பூலாம்பட்டி எஸ்ஐ அமிர்தலிங்கம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று கோயில்காடு பகுதியில் இதேபோல் செந்நாய்கள் கடித்ததில் 3ஆடுகள் இறந்தது. இதனால் வனத்துறையினர் செந்நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: