சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மதுபான விடுதிக்கு போலீசார் சீல்

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மதுபான விடுதிக்கு போலீசார் சீல் வைத்தனர். எல்.பி.கே. ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் செயல்பட்டு வந்த விடுதியில் போதைப் பொருள் விற்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து சோதனை நடத்திய ஆயிரம் விளக்கு போலீசார் சட்டவிரோதமாக மதுபான விடுதி நடத்தியதை கண்டுபிடித்தனர். மதுபான விடுதி நடத்தி வந்த முஸ்தபா இணையத் உள்ளிட்ட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: