ஆர்டிஐ மனுவுக்கு 9000 பக்க தகவல்: மாட்டு வண்டியில் ஏற்றி சென்ற சமூக ஆர்வலர்

சிவ்புரி: மத்தியப்பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள பைரட் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் மக்கான் தகாட். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் ஆவாஸ் யோஜனா, அனைவரும் வீடு திட்டம் குறித்த விவரங்களை கேட்டு மனு தாக்கல் செய்தார். இரண்டு மாதங்கள் ஆன நிலையிலும் நகராட்சி பதில் அளிக்கவில்லை. பின்னர் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செலுத்தினால் மட்டுமே விவரங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆங்காங்கு கடன் பெற்று ரூ.25 ஆயிரத்தை மக்கான் செலுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து தகவல்களை பெற்றுகொள்வதற்கு நேற்று அவருக்கு அழைப்பு வந்துள்ளது. நீண்ட மாத போராட்டத்துக்கு பின் தனது மனுவிற்கு பதில் வழங்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்த அவர், மேளதாளங்கள் முழங்க மாட்டு வண்டியில் நகராட்சி அலுவலகத்துக்கு வந்துள்ளார். அங்கு அதிகாரிகள் 9000 பக்கம் கொண்ட தகவல் ஆவணங்களை வழங்கியுள்ளனர். தனது நண்பர்கள் மூலமாக இந்த பக்கங்களை எண்ணிய பின்னர் அவற்றை மாட்டு வண்டியில் மக்கான் ஏற்றி சென்றுள்ளார்.

Related Stories: