வியன்னா: வியன்னா ஓபன் டென்னிஸில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை வீழ்த்தி, ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் டேனில் மெட்வடேவும், மண்ணின் மைந்தர் டொமினிக் தீமும் மோதினர். இப்போட்டியில் மெட்வடேவ் 6-3, 6-3 என நேர் செட்களில் வெற்றி பெற்றார். எனினும் இருவருக்கும் இடையேயான இந்த மோதல் ஒரு மணி நேரம், 40 நிமிடங்கள் வரை நீடித்தது. இருவரும் பந்தை சரியான இடங்களில் பிளேஸ் செய்து மாறி, மாறி அடித்துக் கொண்டிருந்தனர். இதனால் ஒவ்வொரு பாயின்ட்டுக்கும் அதிக நேரம் பிடித்தது.