இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் சூரிய கிரகணம் தொடங்கியது; வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என எச்சரிக்கை..!!

சண்டிகர்: வட இந்தியா முழுவதும் சூரிய கிரகணம் தெரிகிறது. இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் சூரிய கிரகணம் தொடங்கியது. இந்தியாவில் காஷ்மீரின் லேவில் தொடங்கி, டெல்லி, ஜெய்ப்பூர், ஐதராபாத், லக்னோ நகரங்களில் சூரிய கிரகணம் தொடங்கியது. இந்தியாவின் முதல் மாநிலமாக பஞ்சாபின் சண்டிகரில் 4.23 மணிக்கு சூரிய கிரகணம் தென்பட்டது. மாலை 5.30 மணிக்கு கிரகணம் முழுமையாக தெரியும். வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டாம் என்று அறிவியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: