பாலியல் புகார் பிரஜ்வல் போலீஸ்காவல் 10ம் தேதி வரை நீட்டிப்பு: நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கர்நாடாக மாநிலம் ஹாசன் மக்களவை தொகுதி உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்த விவகாரம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. வெளிநாட்டில் பதுங்கி இருந்த பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்பியதும் விமானநிலையத்திலேயே மே 31ம் தேதி போலீசார் கைது செய்தனர். இவரது போலீஸ் காவல் நேற்று மாலையுடன் முடிந்ததை தொடர்ந்து, பிரஜ்வலை நீதிமன்றத்தில் நீதிபதி முன் போலீசார் ஆஜர்ப்படுத்தினர்.

அப்போது எஸ்ஐடி சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, பிரஜ்வல் ரேவண்ணா விசாரணைக்கு அவ்வளவாக ஒத்துழைக்கவில்லை முக்கிய சாட்சியாக இருக்கும் செல்போன் ஒன்று நாசப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேட்டால், தான் செல்போன் பயன்படுத்துவதில்லை என்று மழுப்பலான பதில் கொடுக்கிறார்.

புகார் தொடர்பாக அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால், போலீஸ் காவலை நீட்டிக்க வேண்டும் என்றார். அதற்கு பிரஜ்வல் ரேவண்ணா தரப்பு வக்கீல் மறுப்பு தெரிவித்தார். இருப்பினும் இரு தரப்பு வாதம் கேட்டபின், பிரஜ்வல் ரேவண்ணாவை ஜூன் 10ம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து பிரஜ்வலை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

The post பாலியல் புகார் பிரஜ்வல் போலீஸ்காவல் 10ம் தேதி வரை நீட்டிப்பு: நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: