காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் கைதான 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு: கோவை காவல் ஆணையர் பேட்டி

கோவை: கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் கைதான 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கைதான 5 பேர் மீதும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5 பேர் மீதும் சதி செய்தது, இரு பிரிவினர் இடையே மோதல் உண்டாக்குதல், உபா உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உயிரிழந்த ஜமேஷா முபின் பயன்படுத்திய கார் சுமார் 10 பேரிடம் கை மாறியது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றும் காவல் ஆணையர் தெரிவித்தார்.

கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பாக அதிகாலையில் கார் ஒன்று பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது. இது அப்பகுதியினரை கடும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்த 9  தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 22 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த முபின் என்பவர் உயிரிழந்ததுள்ளார்.  கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக இதுவரை 5 பெரிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தடவியல் வல்லுநர்களை வரவழைத்து புலன் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்று ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உ.ப. சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வெடிபொருட்கள் பயன்படுத்தி தான் சிலிண்டர் வெடிக்கப்பட்டுள்ளது என்று கண்டறிந்துள்ளனர். வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் உபா சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளது என்று கோவை ஆணையர் பேட்டியளித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட சிலர் கேரளாவுக்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சிலரை 2019-ல் என்ஐஏ விசாரித்துள்ளது. எல்லாம் வழிபாட்டு தளங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று கோவை மாநகர ஆணையர் தெரிவித்துள்ளார்.

Related Stories: