விபத்தில்லா தீபாவளி கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் 6,673 தீயணைப்பு வீரர்கள் உஷார்:அழைப்பு வந்த 10 நிமிடத்தில் சம்பவ இடத்துக்கு செல்ல வேண்டும்: வீரர்களுக்கு அதிகாரிகள் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்க 6,673 தீயணைப்பு வீரர்கள் உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ேமலும், புகார் வந்த 10 நிமிடத்திற்குள் நிகழ்விடத்திற்கு அவர்கள் செல்ல வேண்டும் என்று உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு இல்லாததால் வழக்கத்தை விட இந்த ஆண்டு தீபாவளி அன்று அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள 352 தீயணைப்பு நிலையங்களில் மீட்பு பணிகளுக்கான அனைத்து உபகரணங்களுடன் தயாராக இருக்க தீயணைப்புத்துறை டிஜிபி பி.கே.ரவி தீயணைப்பு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் சம்பந்தப்பட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் விபத்துக்களை தடுக்கும் வகையில் அடிக்கடி நேரில் சென்று ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடைசி நாள் என்பால் முன் அனுமதி இல்லாமல் வைத்திருந்கும் பட்டாசு கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அடர்த்தியாக இருக்கும் பகுதியில் தீயணைப்பு வாகனத்துடன் 24 மணி நேரமும் வீரர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்,

தீ விபத்து குறித்து பொதுமக்கள் அளிக்கும் தகவலின் படி சம்பந்தப்பட்ட இடத்திற்கு 10 நிமிடத்திற்குள் செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட 6,563 பட்டாசு கடைகளில் முறையாக தீயணைப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று நிலைய அலுவலர்களுக்கு அந்தந்த மாவட்ட தீயணைப்பு அதிகாரிகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விபத்தில்லா தீபாவளி  கொண்டாடும் வகையில் தீயணைப்புத்துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: