பங்களாவை காலி செய்ய மெகபூபாவுக்கு நோட்டீஸ்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, கடந்த 2005ம் ஆண்டு முதல் குப்காரில் உள்ள பேர்வியூ அரசு பங்களாவில் வசித்து வருகிறார். இது, அப்போது முதல்வராக இருந்த மெகபூபாவின் தந்தை முப்தி முகமது சயீத்துக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது முதல் மெகபூபா இங்கு வசித்து வருகிறார். இந்நிலையில், இந்த பங்களாவை காலி செய்து ஒப்படைக்கும்படி மெகபூபாவுக்கு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக, கடந்த 15ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெகபூபா கூறுகையில், ‘எனக்கு சொந்தமாக எந்த வீடும் இல்லை. பங்களாவை காலி செய்யும் விவகாரம் குறித்து முடிவு எடுப்பதற்கு முன்பாக எனது சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவேன்,’ என கூறியுள்ளார்.

Related Stories: