வாக்கு எண்ணிக்கை மையங்களில் குறைபாடா? மாவட்ட தேர்தல் அலுவலரிடம் முகவர்கள் புகார் தெரிவிக்கலாம்: சத்திய பிரதா சாகு பேட்டி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் ராமநாதபுரம் மக்களவை தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இங்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வரும் அறை, பாதுகாப்பு பணிகள், சிசிடிவி கேமரா மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை நேற்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு பார்வையிட்டார்.

தொடர்ந்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தலைமை தாங்கி பேசினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:
வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை அன்று செய்யப்படக் கூடிய முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதுபோன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் உள்ளனர். ஒரு சில இடங்களில் சில காரணங்களால் சிசிடிவி கேமராக்களில் சிறு பிரச்னை ஏற்பட்டது. அது உடனடியாக சரி செய்யப்பட்டது. ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் வேட்பாளரின் முகவர்கள், தேர்தல் உதவி அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவிக்கலாம். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தியாக
உள்ளது’’ என்றார்.

The post வாக்கு எண்ணிக்கை மையங்களில் குறைபாடா? மாவட்ட தேர்தல் அலுவலரிடம் முகவர்கள் புகார் தெரிவிக்கலாம்: சத்திய பிரதா சாகு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: